உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான உக்ரைனில் தயாரிக்கப்பட்ட அன்டோனோவ் AN-225 மிரியா (Antonov AN-225 Mriya), கிய்வ் அருகே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷ்ய தாக்குதலில் எரிந்து சாம்பலானதாக உக்ரேனிய அரசு ஆயுத தயாரிப்பு நிறுவனமான உக்ரோபோரோன்ப்ரோம் இன்று (27) தெரிவித்துள்ளது.
"ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரேனிய விமானத்தின் முதன்மையான அன்டோனோவ்-225 மிரியாவை அழித்தார்கள். இது கியிவ் அருகே ஹோஸ்டோமலில் உள்ள அன்டோனோவ் விமான நிலையத்தில் நடந்தது." என்று உக்ரோபோரோன்ப்ரோம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் தகர்க்கப்பட்ட விமான மறுசீரமைப்புக்கு $3 பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என்றும் அதற்கு நீண்ட காலம் தேவை என்றும் அது கூறியது. (யாழ் நியூஸ்)