நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை (28) முதல் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அத்தியாவசிய நேரங்களுக்கு முன்னுரிமை அளித்து திருத்தப்பட்ட கால அட்டவணை ஏற்கனவே உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
“எங்கள் வழக்கமான பேருந்துகளுக்கு போதுமான டீசல் இல்லை. சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லை. இந்நிலையில் ஐஓசி விலையை உயர்த்தியுள்ளது. எனவே, அவர்களிடமிருந்து எரிபொருளைப் பெற முடியாது. இதனால் பயணங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், அலுவலக நேரங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு முன்னுரிமை அளிக்கவும், குறிப்பிட்ட சில பயணங்களை ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளோம்” என்றார்.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு இலங்கை போக்குவரத்து சபை பஸ்களின் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாது என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)