நாட்டில் மீண்டும் தலைதூக்கும் வெள்ளை வான் கலாச்சாரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மீண்டும் தலைதூக்கும் வெள்ளை வான் கலாச்சாரம்!


நாட்டில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலைதூக்குவது தொடர்பில் கொழும்பு ஆயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை  சிறில் காமினி பெர்னாண்டோ கவலை தெரிவித்தார். 


சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரம தாக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார் என்றும் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, இன்று (14) தெரிவித்தார்.


இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு சற்று முன்னர் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்  என்று அவர் கூறினார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக பிரச்சாரம் செய்த ஒருவர் கைது செய்யப்படுவதும், மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க ஊடகங்களைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் வருத்தமளிப்பதாக அவர் கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.