சமுதித்த மீதான தாக்குதல்; என்னை மௌனமாக்க முடியாது என்கிறார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமுதித்த மீதான தாக்குதல்; என்னை மௌனமாக்க முடியாது என்கிறார்!


இலங்கையின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஊடகவியலாளரின் வீட்டிற்குள் ஆயுதமேந்திய நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை இந்த சம்பவத்திற்கு உள்ளுர் ஊடக அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.


அதிகாரம் மிக்க ராஜபக்ச குடும்பத்தையும் அவர்களது சகாக்களையும் கடுமையாக விமர்சிக்கும் விதத்தில் தனது சமீபத்தைய ஒளிபரப்புகளை வெளியிட்டிருந்த (யூடியுப்பில்) சமுத்தித சமரவிக்கிரம அதிர்ச்சியடைந்தவராக காணப்படுகின்றார், ஆனால் விடியலிற்கு முன்னர் இடம்பெற்ற இந்த தாக்குதலில் அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


அவர்கள் வீட்டின் பாதுகாப்பு கடமையிலிருந்தவரை அச்சுறுத்துவதற்காக ஆயுதங்களை பயன்படுத்தினார்கள், பின்னர் வீட்டிற்குள் சென்றார்கள் என காவல்துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.


ஆகக்குறைந்தது மூன்று பேராவது வந்திருக்கவேண்டும், அவர்கள் வெள்ளை வானில் வந்தார்கள் சமரவிக்கிரம AFPக்கு தெரிவித்தார்.


நான் துப்பாக்கி சத்தங்களை கேட்டேன், அவர்கள் எனது வீட்டின் ஜன்னல்களை உடைத்து நொருக்கிய பின்னர் மலக்கழிவுகளை எறிந்தனர், அது சிசிடிவியில் பதிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.


இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது எனக்கு தெரியாது, ஆனால் என்னை மௌனமாக்க முடியாது என நான் அவர்களிற்கு தெரிவிக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.


Truth with Chamuditha எனும் நிகழ்ச்சியில் பொதுபிரபலங்கள் வர்த்தக சமூகத்தினர் என அனைவருடனும் மோதும்போக்கில் அமைந்திருக்கும் அவரது நேர்காணல்களை விரும்புபவர்களும் வெறுப்பவர்களும் உள்ளனர்.


மேலும் இது தொடர்பில் உள்ளூர் ஊடக சுதந்திர அமைப்புகள் இந்த தாக்குதலை கண்டித்துள்ளன.


இலங்கையில் பத்திரிகையாளர்கள் பல தசாப்தங்களாக எவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றுகின்றனர் என்பதை இந்த தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.


கொல்லப்பட்ட அல்லது தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களை நாங்கள் நினைவுகூர்ந்து ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என வும சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.


2005 முதல் 2015 வரையிலான மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 15 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் என எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.


இறைமை சார்ந்த விவாதம் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து என பொய் முறைப்பாட்டை அளித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இரண்டு வாரங்களிற்கு முன்னர் பொலிஸார் ஹிரு நிறுவனத்தையும் சமுதித்தவையும் விசாரணை செய்ய ஆரம்பித்தனர்.


முன்னைய ராஜபக்ச அரசாங்கத்தினால் ஒடுக்குமுறைக்கு உள்ளானதாக தெரிவித்து பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சமுதித்த சமரவிக்கிரம கடந்த வாரம் பேட்டிகண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.