
யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது STF உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், வரணி பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த உத்தியோகத்தர்கள் குழுவொன்று சட்டவிரோத மதுபான வியாபாரி ஒருவரை கைது செய்வதற்காக சென்றிருந்த விசேட அதிரடிப்படையினர் குழுவொன்றை மறித்துள்ளனர்.
இதன்பின்னர், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர்களில் ஒருவர் சிறு காயங்களுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் கொடிகாமம் பொலிஸார் சந்தேக நபர்கள் ஐவரை கைது செய்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். (யாழ் நியூஸ்)

