
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை தேசிய அணியுடன் இணைந்துள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று (07) நடத்தப்பட்ட வழக்கமான ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் (RAT) இவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதே நாளில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் பின்னர் RAT பரிசோதனையின் முடிவு உறுதிப்படுத்தப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் இன்று அறிவித்துள்ளது.
மெண்டிஸ் தற்போது கொவிட்-19 நெறிமுறைகளுக்கு உட்பட்டு நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடர் 2022 பிப்ரவரி 11 ஆம் திகதி எஸ்சிஜியில் துவங்கவுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அணியுடன் இணைந்து கொள்வதற்காக சாமிக்க கருணாரத்ன இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)

