பேட்ஸ்மன் குசல் மெண்டிஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷன இருவரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடுவது சந்தேகம்.
காரணம், அவுஸ்திரேலிய தொடரின் கடைசி போட்டியின் போது குசல் மெண்டிஸ் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.
இவர் இன்னும் இந்திய தொடருக்கு தகுதியானதாக அறிவிக்கப்படவில்லை, அதே நேரத்தில் நிர்வாகம் அவர் குறித்து இன்று முடிவெடுக்க உள்ளது.
இதற்கிடையில், சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவும் உபாதைக்கு உள்ளாகியுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருப்பதால் இந்திய தொடரில் இருந்து அவர் விலகுவார் என்று இன்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் கடைசியாக செய்த சோதனையின் போது அவர் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதினால் வெளியேற அனுமதிக்கப்படமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்-ரவுண்டர் தனது கட்டாய 07 நாள் தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பிறகு தொற்று மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. (யாழ் நியூஸ்)