மின் ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டமே இதற்குக் காரணம்.
மின் தடை காரணமாக பிரதான வீதிகளில் உள்ள ஒளி சமிக்ஞைகளும் செயலிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மின் தடை காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சண்டிகர் அதிகாரிகள் நேற்று (22ம் திகதி) அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை அமல்படுத்தியதுடன், மின்சாரத் துறையில் வேலைநிறுத்தம் செய்ய 6 மாதங்கள் தடை விதித்தனர்.
மின்சாரத் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் இன்று (23) முதல் 4 மணித்தியால 40 நிமிட மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)