மேலும், கொழும்பில் நடைபெறும் விசேட மாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்தி கொழும்புக்கு செல்வதை கட்டுப்படுத்துமாறு அமைச்சின் செயலாளர் நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெறும் கூட்டங்களுக்கு அரசாங்க அதிகாரிகளை அரசாங்க வாகனங்களில் அழைப்பதற்குப் பதிலாக, அவர்களை ஜூம் தொழில்நுட்பத்தினூடாக இணைக்குமாறும் அவர் மேலும் கூறினார்.
அரசாங்க நிறுவனங்களுக்குள் எரிபொருள் பாவனையை குறைத்தல் மற்றும் எரிபொருளுக்கான செலவீனங்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)