மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்படாத பானுக ராஜபக்ச!
advertise here on top
advertise here on top

மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்படாத பானுக ராஜபக்ச!

இந்தியாவுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கை டி20 அணியில் இருந்து அதிரடி பேட்ஸ்மன் பானுக ராஜபக்சவை நீக்குவதற்கான கடைசி நிமிட முடிவை எடுக்க இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பானுக ராஜபக்ச இந்தியாவுக்குச் செல்வதற்காக ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த போதிலும் பானுக ராஜபக்ச இந்திய தொடருக்கான டி20 அணியில் இடம்பெற மாட்டார் எந இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் 2 கி.மீ உடற்தகுதிப் பரீட்சையில் பானுக ராஜபக்ச சித்தியடைந்த போதிலும், அதற்குத் தேவையான ஸ்கின்ஃபோல்ட் அளவை அவர் இன்னும் அடையவில்லை என்பதால், அவரை அழைத்துச் செல்வதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய டி20 தொடரில் பங்கேற்பதற்காக பானுக ராஜபக்ச பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தொடரில் இரும்து விலகி இலங்கை வந்தார்.

2022 ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரே இலங்கை பேட்ஸ்மேன் பானுக ராஜபக்ச, அவர் 50 இலட்ச இந்திய ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டார்.

இந்திய தொடருக்கான டி20 அணியை இலங்கை கிரிக்கெட் இன்னும் அறிவிக்கவில்லை. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.