ஹட்டன் - டிக்கோயா சலங்கை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று(28) காலை ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கு வழிவிட முற்பட்ட போதே, குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்தில் 17 பேர் பயணித்த நிலையில், 16 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.