மேல் மாகாணத்தில் பெப்ரவரி முதலாம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமே குறித்த மீட்டர்களை விற்பனை செய்வதற்கும் பொருத்துவதற்கும் அனுமதிக்கப்படும் என்றும், அவ்வாறு செய்யாத நிறுவனங்களிடம் இருந்து மீட்டர்கள் பெறப்பட மாட்டாது என்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலக மட்டத்தில் இந்த மீட்டர்களை ஆய்வு செய்ய நடமாடும் சேவை மையங்களை அமைப்பதற்கும் அங்கீகரிக்கப்பட்ட மீட்டர்களுக்கு அடையாள ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு. (யாழ் நியூஸ்)