பொரளையில் உள்ள தேவாலயத்தில் கைக்குண்டு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியரின் மகன் ஓஷல ஹேரத், கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சிறையில் அடைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கத்தோலிக்கர்களை சிக்க வைத்து கார்டினாலை சிறையில் அடைக்கும் திட்டம் ஒன்று இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொரளை தேவாலயத்தின் மீதான கைக்குண்டு வைப்பு வெறும் நாடகம் என்றும், தனது தந்தைக்கு மன நோயாளி இல்லை என்றும் அவர்தெரிவித்தார்.
இணைய சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)