நாட்டில் மேலும் நான்கு புதிய மேம்பாலங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.
ஹங்கேரி மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையேயான நிதி ஒத்துழைப்பின் கீழ் இந்த மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.
இதன்படி, குருணாகல் - முத்தெட்டுகல தொடருந்து கடவை, ஹிரிபிட்டிய சந்தி, பஸ்யால சந்தி, நீர்கொழும்பு மாரிஸ்டெலா சந்தி மற்றும் தலவத்துகொட சந்தி ஆகிய இடங்களில் இந்த மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.