நாட்டில் மெழுகுவர்த்திக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மக்கள் அதிகளவில் மெழுகுவர்த்தியை கொள்வனவு செய்கின்றமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மெழுகுவர்த்தி ஒன்றின் விலையை 15 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மெழுகுவர்த்தி உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.