பண்டாரவளை, ஹீலோயா பிரதேசத்தில் பஸ்ஸில் பயணித்த இரு பாடசாலை மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பாடசாலை மாணவி ஒருவர் தனது தந்தைக்கு தெரிவித்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஊவா பரணகம பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பண்டாரவளை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த நபர், இதற்கு முன்னரும் பல பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்களின் முடிகளை வெட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கு சொந்தமான பையில் இருந்து பல முடி எச்சங்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர் திருமணமானவர் எனத் தெரிவித்த அவர்கள், அவர் தனது ஆர்வத்துக்காகவே இந்தச் செயலைச் செய்ததாக மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)