இரத்மலானை விமான நிலையம் சர்வதேச விமான சேவைகளை இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்திற்கு விமானங்களை இயக்குவதற்கு இரண்டு விமான நிறுவனங்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
தென்னிந்தியா மற்றும் மாலத்தீவு போன்ற இடங்களுக்கு சர்வதேச விமானங்கள் தொடங்கப்பட உள்ளன என்றார்.
இரத்மலானை விமான நிலையத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பாக மேலும் பல சர்வதேச விமான நிறுவனங்களுடனும் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)