இராஜாங்க அமைச்சர் சுசில் பிரமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
“ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்” என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுசில் பிரேமஜயந்த அண்மையில் அரசாங்கத்தின் பல முயற்சிகளை விமர்சித்துள்ளார்.
அவர் தனது பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி மேம்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார். (யாழ் நியூஸ்)