தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
ஒரு ட்விட்டர் செய்தியில், இந்த கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.
இரண்டு அரசாங்க அதிகாரிகளும் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாக அவர் மேலும் கூறினார்.
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்தியாவிடம் இருந்து நிதியுதவி பெற விரும்புகிறது.
இந்தியாவிடமிருந்து 900 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு நிதி உதவிப் பொதிகள் இந்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
400 மில்லியன் டொலர்கள் இடமாற்று வசதி மற்றும் எரிபொருளுக்கான 500 மில்லியன் டொலர் கடனுதவி ஆகிய இரண்டும் இந்த மாதம் இலங்கையை சென்றடையும் என அவர்கள் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)