2021 உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதகர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி மூலமான விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான doenets.lk யில் பிரவேசித்து அல்லது DOE என்ற கையடக்க செயலியை பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும்.
இதற்காக தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்த முடியும் என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.