இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பில் கிட்டத்தட்ட பாதியளவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அங்கிருந்த சுமார் 382 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தில் தற்போது 175.4 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என்றார்.
இந்நிலையில் 500 மில்லியன் டொலர் கடன் தவணையை இலங்கை எவ்வாறு செலுத்தும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றில் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)