விக்டோரியா நீர்த்தேக்கத்தில் வழக்கத்திற்கு மாறாக திடீரென தண்ணீர் வறண்டு கிடப்பதால் இது குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமை நாட்டின் தற்போதைய மின்சார நெருக்கடி மற்றும் நன்னீர் மீன்பிடித் தொழிலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றாடல் குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான தலைமைப் பொறியியலாளர் கூறுகையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பதிவான நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் ஜனவரி நடுப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக உயர்ந்தது.
நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச கொள்ளளவைக் காட்டிலும் அதிகபட்சமாக 10 மீற்றர் வரை நீர் மட்டம் குறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுண்ணாம்புக் கல் நீர்த்தேக்கங்களில் விரிசல் ஏற்பட்டு அடிக்கடி நீர் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இதுபற்றி முன்னர் விரிவாகக் குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)