நாட்டிற்கான எரிபொருள் விநியோகத்தை ரேஷன் அடிப்படையில் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான அன்னியச் செலாவணி வழங்குவதில் ஏற்பட்ட நெருக்கடியே இதற்குக் காரணம்.
நாட்டில் எரிபொருள் பாவனையை குறைக்கும் வகையில் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், எரிபொருள் பாவனையை கணிசமான அளவு குறைக்கவில்லை எனவும் எரிசக்தி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் ரேஷன் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என பல அமைச்சர்கள் அமைச்சரவையில் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போதியளவு டொலர்கள் இல்லாத காரணத்தினால், பல எரிபொருள் தாங்கிகள் ஏற்கனவே இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
டொலர்கள் செலுத்தும் வரை கப்பல்கள் துறைமுகத்தில் தங்குவதற்கு தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். (யாழ் நியூஸ்)