மகாவலி ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
இதனையடுத்து கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கம்பளை இல்வத்துர பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற கம்பளை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் லக்சிறி பெர்னாண்டோ, குறித்த பெண் தொடர்பான செய்திகளை சுற்றுவட்டார காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்கவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவருடையது என சந்தேகிக்கப்படும் கைப்பை ஒன்று ஆற்றின் கரையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து 15,000 ரூபாய் பணமும் மேலும் சில மருந்துப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.