எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சாத்திகளுக்கு இதுவரையில் விண்ணப்பப்படிவம் கிடைக்காவிடின், www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை அண்மையில் வெளியானது.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி முதல் மார்ச் 05ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை நாடளாவிய ரீதியில் 345,242 பரீட்சாத்திகள் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளனர். அத்துடன், 2,438 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.