கரந்தெனிய, பிஹிம்பிய கந்த பிரதேசத்தில் உள்ள கறுவா தோட்டம் ஒன்றிலிருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதா கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 20 வயதுடைய ஆண் மற்றும் 16 வயதுடைய பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கரந்தெனிய பொலிசார், அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலத்தையும், தரையில் கிடந்த இளைஞனின் சடலத்தையும் மீட்டுள்ளனர்.
இந்நிலையில்,உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.