நாட்டு அபிவிருத்திக்காக மணல் இறக்குமதி செய்ய திட்டம்!

நாட்டு அபிவிருத்திக்காக மணல் இறக்குமதி செய்ய திட்டம்!


2024ஆம் ஆண்டு முதல் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

துறைமுக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நாட்டில் உள்ள ஆறுகளில் இருந்து மணலை வழங்க முடியாது என சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

2021-25 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மணல் தேவை 57 மில்லியன் கனமீட்டராக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் நாட்டில் 42 மில்லியன் கனமீட்டரே உள்ளது. இதனால் ஆறுகளில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டு வருவதாகவும், கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவையில் இருந்து மணல் எடுப்பதும் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டாலும், மீனவ மக்களின் எதிர்ப்புக் காரணமாக மணல் இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.