பள்ளிவாசல்களின் வருமானம் போதாமையால் ஊழியர்களின் சம்பளம் குறைவாக இருக்கிறது: இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்! பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர்

பள்ளிவாசல்களின் வருமானம் போதாமையால் ஊழியர்களின் சம்பளம் குறைவாக இருக்கிறது: இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்! பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர்

அக்கரைப்பற்றில் பல பள்ளிவாசல்களில் கடமைபுரிபவர்களின் சம்பளம் 15000 ரூபாய்க்கும் குறைவாக  இருப்பதாக பலர் முறையிட்டுள்ளனர். இக்கோரிக்கைகள்  நியாயமாக இருந்தாலும் அநேக  பள்ளிவாசல்களின் வருமானம் போதாமையே இதற்கு காரணமாகவும் இருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்ய புதிய திட்டங்களை உருவாக்கியிருந்த வேளையில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. விரைவில் இக்குறைகள் நிவர்த்திக்கப்படும் என நம்புகின்றோம் என்று அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்  

மன்புல் கைராத் அரபுக்கல்லூரியின் ஹிப்ழுல் குர்ஆன் தமாம் நிகழ்வு  கல்லூரியின் அதிபர் ரியாஸ்தீன் ஹாபிஸ் (ஹக்கானி) அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் 8 மாணவர்கள் குர்ஆணை மனனம் செய்து தமாம் செய்திருந்தனர். 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,   

மேலும் எமது பள்ளிவாசல் வெளிப்புறத்தில் இப்பகுதியில் வசிக்கும் சிறுவர்களை விளையாடுமாறு வேண்டிக் கொண்டதற்கினங்க கடந்த ஒருவருடத்துக்கு மேல் அவர்கள் இங்கே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்படி விளையாடும் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தவிர்த்துக் கொள்வதுடன் வீணான பழக்க வழக்கங்களிலிருந்தும் தங்களை பாதுகாத்து கொள்கின்றனர். இதனால் தூய்மையான எதிர்கால சந்ததிகளை நாம் வளர்த்தெடுக்க முடியும். அவ்வாறு விளையாடும்போது பள்ளிவாசலின் சொத்துக்களுக்கு ஏதாவது சேதம்கள் ஏற்பட்டால் அதனை என்னிடம் தெரிவிக்குமாறும் அக்குழந்தைகளை நொந்துகொள்ள வேண்டாம் எனவும் இங்கு கடமை புரிபவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை அரபுக் கல்லூரியின் தலைவர் அஸ்ரப் மௌலவி, விரிவுரையாளர் கலாநிதி ராசிக் மௌலவி, கலாநிதி சித்தீக் ஹாபிஸ், நீதவான்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மன்புல் கைராத் அரபுக் கல்லூரியின் நிருவாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

-நூருல் ஹுதா உமர்

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.