பல அனல்மின் நிலையங்களில் இறுதிக்கட்ட எரிபொருள் எண்ணெய் உற்பத்தி காரணமாக நாளை (24) இரவு முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய (22) நிலவரப்படி நீர்மின் உற்பத்தி மொத்த மின்சாரத் தேவையில் 25 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன், நிலக்கரி, டீசல் மற்றும் எரிபொருளின் மின்சார விநியோகம் 72 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம் எரிபொருள் தீர்ந்துள்ளதால் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் சுமார் 183 மெகாவோட் தேசிய மின் உற்பத்திக்கு இழப்பு நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. (யாழ் நியூஸ்)