அண்மைய காலங்களில் சந்தையில் அதிகரித்திருந்த கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக கால்நடை வளங்கள், பண்ணை மேம்பாட்டு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் 27 ரூபா வரையில் அதிகரித்திருந்த முட்டை விலை, தற்போது 21 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் இலங்கையில் முட்டை உற்பத்தியை அதிகரிக்க, தீர்வை வரியின்றி விலங்கு உணவை இறக்குமதி செய்ய நிதி அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கமைய, தீர்வை வரியற்ற விலங்குணவுகள் கொண்டுவரப்பட்டு, பண்ணைகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன.