அரசாங்கம் நேற்றைய தினம் அறிமுகப்படுத்திய நிவாரணப் பொதியால் நாடு எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிவாரணப் பொதி நாட்டில் அதிக பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்க புள்ளிவிபரங்களின்படி நாட்டில் உணவுப் பணவீக்கம் 22% ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.