ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து இரண்டு வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொலைதூர மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இவர்.
கிராமத்திற்குச் செல்வதற்கு வாகனம் இல்லை எனக்கூறி பிரதமர் அலுவலகத்தில் வாகனம் கோரிய அவர், இதுவரை அதனைத் திருப்பித்தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்று திருப்பித்தருவதாக கூறி ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும் வாகனம் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார்.
ஆனால் உறுதியளித்தபடி வாகனம் திருப்பி தரப்படவில்லை.
இதன் காரணமாக ஜனாதிபதி செயலகத்தில் உள்ள வாகனப் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் பிரதமர் அலுவலகம் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உறுப்பினர் தற்போது ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் மற்றும் தெரியாத இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)