இன்று மின்வெட்டு இருக்காது என முன்னர் உறுதியளிக்கப்பட்ட போதிலும் நாட்டில் பல பகுதிகளில் மின்வெட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நுகேகொட, பொரலஸ்கமுவ, கல்கிசை, இரத்மலானை, மாலபே, வத்தளை போன்ற பிரதேசங்களில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின் தடைக்கான காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (11) நாட்டின் எந்த பகுதியிலும் மின் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.