முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் உயர் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் எம்.பி விடுத்த கோரிக்கைக்கு அமைய சிறைச்சாலை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாவல திறந்த பல்கலைக்கழகம் வழங்கும் முகாமைத்துவம், தலைமைத்துவம், இளைஞர் மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தைப் பின்பற்றுவதற்கு அவர் அனுமதிக்கப்படுவார்.
வீடியோ தொழிநுட்பம் மூலம் விரிவுரைகளை பின்பற்ற முன்னாள் எம்.பி அனுமதிக்கப்படுவார் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)