சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் உள்ள புகையிரத கடவையில் கொழும்பில் இருந்து காங்கேசந்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மாணவர் மோதியதில் உயர்தர மாணவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் தனது சகோதரனுடன் பயணித்த போது புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது புகையிரதம் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், வரணி பிரதேச மீசாலை வீரசிங்கம் கல்லூரியில் உயர்தரம் பயிளும் 18 வயதுடைய உதயகுமார் பானுஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)