இந்த நாட்டு மக்கள் விரைவில் நாளொன்றுக்கு பல மணிநேர மின்வெட்டுக்கு முகம்கொடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதில்லை எனவும் சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் ஏற்கனவே செயலிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நாட்டு மக்களுக்கு அறிவிக்காமல் மின்வெட்டு இடம்பெறுவதாக மக்களிடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் மணிக்கணக்கில் இருளில் தவிக்கும் காலம் விரைவில் வரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் சில நாட்களில் எலும்பை சுட்டு, சதையை சுட்டு சாப்பிட்டுவிட்டு குகைக்குள் இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாடு வந்துவிடும் என்றும் கூறுகிறார்.
மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)