திருகோணமலை எண்ணெய் குதங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (06) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கையொப்பமிட்டவர்களில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் ட்ரின்க்கோ பெட்ரோலியம் டெர்மினல் (Pvt) Ltd. ஆகியன இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், இலங்கையில் கையகத்தில் இருக்கும் 85 எண்ணெய் குதங்களில், 24 குதங்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 24 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் முதலீட்டிலும், 61 குதங்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி புதிய நிறுவனம் ஊடாக 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டிலும் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.