ஹரின் பெர்னாண்டோ ஜனாதிபதியின் சிம்மாசன உரை சம்பந்தமான சபை ஒத்திவைப்பு நேர விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அளுத்கமகே இந்த சவாலை முன்வைத்தார்.
ஹரின் பெர்னாண்டோ தொடர்ந்தும் ஈஸ்டர் தாக்குதல் பற்றி பேசியதால், தான் அவரை விவாதத்திற்கு அழைத்ததாக மகிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.
“ ஈஸ்டர் தாக்குதல் பற்றிய எம்மிடம் இருக்கும் சாட்சியங்களை நாங்கள் கொண்டு வருகின்றோம். நீங்கள் உங்கள் சாட்சியங்களை கொண்டு வாருங்கள். நாங்கள் விவாதிப்போம்” என அமைச்சர் கூறினார்.
இதற்கு பதிலளித்த ஹரின் பெர்னாண்டோ, விவாதத்திற்கு தயார் எனவும் விவாதங்களுக்கு அஞ்சப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.