குவைத் ஏர்வேஸ், இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூர் முகவர் அமைப்புகள் நிலுவைத் தொகையை செலுத்தாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் டொலர் நெருக்கடியே இதற்கு காரணம் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து, குவைத் ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை வாரத்திற்கு ஒரு விமானமாக மட்டுமே மட்டுப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கான விமான சேவையை நடத்துவதற்கான செலவை ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.