இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவன் பெரேரா அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டுக்கு (SLC) அனுப்பிய கடிதத்தில், பெரேரா தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கான நேரம் இது என்று தான் நம்புவதாகக் கூறினார்.
இருப்பினும், இன்னும் சிறிது காலம் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்றும் அவர் கூறினார்.
"இலங்கை கிரிக்கெட் ஆனது எனது காலம் முழுவதும் பெரும் உத்வேகத்தையும் ஆதரவையும் அளித்தது. உங்களுக்கும், செயற்குழுவிற்கும், கடந்த காலத்திலும் தற்போதுள்ள எனது பயிற்சியாளர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்று தில்ருவன் பெரேரா கூறினார்.
39 வயதான அவர் கடைசியாக 2021 ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இலங்கைக்காக விளையாடினார்.
டிசம்பர் 2017 இல், தில்ருவான் 100 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அதிவேக இலங்கை மற்றும் உலகின் ஏழாவது வீரர் ஆனார்.
அவர் தனது 25வது போட்டியின் போது இந்த சாதனையை நிகழ்த்தினார், இச்சாதனையை முதலில் படைத்த முத்தையா முரளிதரனை விட இரு போட்டிகள் குறைந்த எண்ணிக்கையில் இச்சாதனையை இவர் புதுப்பித்தார். (யாழ் நியூஸ்)