தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
தமது ட்விட்டர் பதிவில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பைப் பேணியவர்கள், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், பரிசோதனை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரியுள்ளார்.