பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைத்தவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைத்தவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!!


பொரளை கத்தோலிக்க தேவாலயத்தில் கைக்குண்டு  ஒன்றை வெடிக்கும் விதத்தில் வைத்ததது தான் என்று சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 75 வயதான ஓய்வுபெற்ற வைத்தியர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.


இதுவரை பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களில் அவருக்கு தேவாலயத்தின் மீது பகை இருந்தது தெரியவந்துள்ளது.


இதற்கு முன்னர் நாரஹேன்பிடவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் கைக்குண்டு ஒன்று வைக்கப்பட்ட சம்பவத்தில் தாம் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பொரளை கத்தோலிக்க தேவாலயத்தில் கைக்குண்டு வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 75 வயதான ஓய்வுபெற்ற வைத்தியர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.


நீண்ட விசாரணைகளின் போது, ​​தான் 1974 ஆம் ஆண்டு குறித்த கத்தோலிக்க தேவாலயத்தில் ஒரு பௌத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.


அப்போது தேவாலயத்தில் இருந்த பாதிரியார் தனது மனைவி பௌத்த மதத்தை சேர்ந்தவர் என்பதால் காலையில் திருமண வைபவத்துக்கான பூஜையை தமக்கு வழங்காததால் மனமுடைந்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.


குறித்த தேவாலயத்தில் தனது சக ஊழியரை கொண்டு கைக்குண்டு வைத்ததாக மருத்துவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது, நாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.


தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், அவரை சிகிச்சைக்காக கொம்பனித்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவரை அனுமதிக்க மருத்துவமனை மறுத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.


பின்னர், நாரஹேன்பிடவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இதன்போது தெரியவந்துள்ளது.


குறித்த வைத்தியசாலையில் தனது மனைவிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் வைத்தியசாலையை பிரபலப்படுத்துவதற்காக தனது சக ஊழியரால் கைக்குண்டு வைத்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.


குறித்த நபருக்கு அவ்வப்போது பணம் வழங்கியதாக சந்தேகத்திற்குரிய ஓய்வுபெற்ற வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.


மனைவி மீது கொண்ட அளவற்ற அன்பினால் தனது விரலில் அணிந்துள்ள மோதிரத்தில் மனைவின் அஷ்தியை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.