எரிவாயு சிலிண்டர் வழங்க மறுத்த விநியோகஸ்தர்! நுகர்வோர் அதிகார சபை தலையீடு!

எரிவாயு சிலிண்டர் வழங்க மறுத்த விநியோகஸ்தர்! நுகர்வோர் அதிகார சபை தலையீடு!


நுவரெலியாவில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் நுவரெலியா நுகர்வோர் அதிகாரசபையின் தலையீட்டில் நேற்று (05) மீட்கப்பட்டு வாடிக்கையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
நேற்றைய தினம் நுவரெலியாவில் உள்ள லிட்ரோ கேஸ் நிறுவன விநியோகஸ்தர் ஒருவருக்கு லிட்ரோ நிறுவனம் சுமார் 50 எரிவாயு சிலிண்டர்களை டெலிவரி செய்திருந்தது.

இருப்பினும், வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து, சில வாடிக்கையாளர்கள் பலவந்தமாக விநியோகஸ்தரின் கடைக்குள் நுழைந்து சிலிண்டர்களை வாங்கினர்.

இவ்வாறு இருக்கையில், வரிசையில் காத்திருந்த சிலர் நுவரெலியா நுகர்வோர் அதிகாரசபை அலுவலகத்தில் விநியோகஸ்தர் எரிவாயு சிலிண்டர் வழங்காதது குறித்து வழங்கிய புகாரை அடுத்து, அதிகாரிகள் வந்து அங்கிருந்த சிலிண்டர்களை மீட்டு விநியோகம் செய்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.