இருபது மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கின் இன்றைய தீர்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இருபது மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கின் இன்றைய தீர்ப்பு!

20 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.

புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் சம்மதம் தெரிவித்த போதிலும், அது தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்பதனால் பிணை உத்தரவை நிராகரித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் பிணை கோருமாறும் நீதிவான் தரப்பினருக்கு மேலும் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் நலன் கருதி ஏனைய தரப்பினருடன் சமரசம் செய்து கொள்ள இணங்கியதையடுத்து, புத்தளம் மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜனவரி 20 ஆம் திகதி, சட்டமா அதிபர் (ஏஜி) திணைக்களம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று கூறியது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதிகள் புத்தளம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தால் மட்டுமே பிணை வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஏப்ரல் 2020 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு 20 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திம் மற்றும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் (ICCPR) சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.