கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு - கூரை மேல் ஏரி தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு - கூரை மேல் ஏரி தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் இலங்கை விமானப்படை கொமாண்டோக்கள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வெளிநாட்டவர் போலி கடவுசீட்டு மூலம் அபுதாபி ஊடாக பிரான்ஸின் பாரிஸிற்கு செல்ல முயற்சித்துள்ளார். எனினும் அவர் எந்த நாட்டவர் என அடையாளம் காணப்படாத வெளிநாட்டவராகும்.

அவர் கட்டுநாயக்க விமான குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்த போது திடீரென விமான நிலையத்தில் தப்பியோடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பின்னர் அவர் விமான நிலையத்தின் கூரை மீது ஏறி வெளியே ஒடும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.