இரண்டு தமிழ் கட்சிகள் உள்ளடங்கலாக மூன்று அரசியல் கட்சிகளின் பதிவை இன்று (10) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோர்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏலவே தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாகத் தேர்தல்கள் ஆணைக்குழவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் அரசியல் கட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய லங்கா சுதந்திர கட்சி என்ற கட்சியும் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.