ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக எப்போதும் போராடும் மனிதாபிமான மிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக சகல ஜனநாயக உரிமைகளுடன் கூடிய விடுதலைக்கான போராட்டம் இந்த வருடத்தில் புதிய சுற்றில் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை இன்றைய தினம் சந்தித்துள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி முழு அர்ப்பணிப்புடன் செயற்படும். தமது கட்சியின் இளம் உறுப்பினர்களின் பங்கேற்புடன் போராட்டம் ஆரம்பிக்கப்படும்.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு தாம் பல தடவைகள் அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்தும், பல சந்தர்ப்பங்களில் வாய்மொழி மூலமாகவே சாதகமான பதில்கள் கிடைத்தது.
ஆனால் அது இன்று வரை நடைமுறையில் செயல் முறைப்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.