பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்றைய தினம் (24) சத்திர சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது, பிரதமரின் வாயில் சிறிய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீண்ட காலமாக பிரதமரின் பிரத்தியேக மருத்துவராக செயற்பட்டு வரும் வைத்தியர் நரேந்திர பிந்தும் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் வைத்தியர் நரேந்திர பிந், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ள முன்னதாக திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், சத்திர சிகிச்சைக்குப் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பிரதமரின் முள்ளந்தண்டில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையென பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.