பிரதமர் மஹிந்தவின் வங்கி கணக்கை சூறையாடிய பணிக்குழாம் பிரதானி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமர் மஹிந்தவின் வங்கி கணக்கை சூறையாடிய பணிக்குழாம் பிரதானி!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிக்குழாம் பிரதானியாக கடமையாற்றிய உதித் லொக்குபண்டாரவிடம் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான வங்கிக் கணக்கிலிருந்து 35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை உதித் லொகு பண்டார மோசடி செய்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான அரச வங்கியொன்றில் உள்ள கணக்கிலிருந்து, அதற்காக வழங்கப்பட்ட ATM அட்டையைப் பயன்படுத்தி பணம் மீளப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பில் பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவரிடம் நாம் வினவிய போது, ​​குறித்த கணக்கில் உள்ள பணம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கொடுப்பனவாக பெற்றுக் கொண்டதென தெரிவித்தார்.


வங்கிக் கணக்கில் உள்ள நிலுவைத் தொகை தொடர்பில் எழுந்த சந்தேகத்தையடுத்து, கணக்கை ஆய்வு செய்தபோது, கடந்த பல ஆண்டுகளாக குறித்த வங்கிக் கணக்கில் இருந்து தொடர்ந்தும் பணம் மீளப் பெறப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த வங்கிக் கணக்கிற்காக வழங்கப்பட்ட ATM அட்டை உதித் லொகுபண்டார வசமிருந்ததாக தெரியவந்துள்ளது.


உதித் லொக்குபண்டார முன்னாள் சபாநாயகர் வீ.ஜே.எம். லொக்குபண்டாரவின் மகனாவார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.