பல்லின மக்களை நாட்டின் பிரஜைகளாக கொண்டுள்ள இலங்கையில், ஒவ்வொரு இனத்திற்கும், அவரவர் பின்பற்றும் மதத்தினை அடிப்படையாகக் கொண்டு, அவரவர் கலாச்சாரங்கள் மார்க்க விடயங்கள் வேறுபடுகின்றன.
இந்த வகையில் அவரவர் இனத்திற்கும், மதத்திற்கும் உரித்தான, வேறுபடும், மத, சட்ட, கலாச்சார விழுமியங்களை ஒவ்வொரு சமூகங்களாலும் காலாகாலமாக எடுத்து நடக்கப்பட்டு, அவை பாதுகாக்கப்பட்டுவருகிறது.
இதனிடையே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஓரே நாடு ஒரேசட்டம் செயலனி, முஸ்லிம் தனியார் சட்டம் ஒழிக்கப்பட படவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இதேவேளை ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி முஸ்லிம் சட்டங்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
முஸ்லிம் தனியார் சட்டம் சம்பந்தமான கருத்துக்களை வெளியிட்டு வரும் நீதி அமைச்சர், முஸ்லிம் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும், காதி நீதிமன்றங்கள் இல்லாது ஒழிக்கப்படும் என கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
அதேவேளை அண்மையில் முஸ்லிம் நாட்டு ராஜதந்திரிகளை சந்தித்த வெளிநாட்டமைச்சர் G.L பீரிஸ் அவர்கள் முஸ்லிம் சட்டங்கள் காதி நீதிமன்றங்கள் போன்றவை ஒழிக்கப்படமாட்டாது என்றும், அவை பாதுகாக்கப்படும் என்றும் கூறினார். அண்மையில் கொழும்பிலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றின் வைபவம் ஒன்றிற்கு சமூகமளித்த அமைச்சர் அவர்கள் அங்கும் இவ்விடத்தை பகிரங்கமாக குறிப்பிட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
எனவே அரசின் முக்கிய பொறுப்பான இரு அமைச்சர்கள் இவ்வாறு இரு நிலைப்பாடுகளில் இருந்துவருகின்றனர்.
அவ்வாறாயின் இலங்கை சர்வதேசத்திற்கு திரு முகத்தையும், தேசத்திற்கு கரு முகத்தையும் காட்ட, முஸ்லிம் சட்டத்தை ஒரு சந்தர்ப்பமாக பயன் படுத்துகின்றதா ?
(பேருவளை ஹில்மி)